ADDED : செப் 16, 2026 06:02 PM
மதுரை: காந்திய சிந்தனைகளை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், கஸ்துாரிபாய் காந்தி அறக்கட்டளை, ஶ்ரீபூ கலாசார மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான சிறப்பு போட்டிகள் மதுரையில் நடக்கின்றன.
ஐந்து முதல் 8ம் வகுப்பு, 9 முதல் பிளஸ் 2 என மாணவர்கள் பிரிக்கப்பட்டு கொள்குறி வகை தேர்வு, ஓவியம், கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகின்றன. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பங்கேற்கலாம். தேர்வு பாடக்குறிப்புகள் வழங்கப்படும்.
செனாய் நகர் சேவாலயம் மாணவர் விடுதி, டாக்டர் தங்கராஜ் சாலை என்.எம்.ஆர்., சுப்பராமன் பள்ளி ஆகிய இடங்களில் செப். 27 மற்றும் அக். 2ல் காலை 10:00 முதல் மதியம் 12:30 மணி வரை போட்டிகள் நடைபெறும். முதல் 3 இடங்களை வெல்வோருக்கு பரிசு, அனைவருக்கும் பங்கேற்பு சான்று வழங்கப்படும்.
அதிக மாணவர்கள் பங்கேற்கும் பள்ளிக்கு ‘சிறந்த பள்ளி விருது’ வழங்கப்படும். விரும்பும் பள்ளிகள் தங்கள் வளாகத்திலேயே செப். 22 முதல் அக். 2 வரை போட்டிகளை நடத்தலாம். பங்கேற்போர் ரூ.50 செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். தலைப்புகள் உள்ளிட்ட விவரங்களுக்கு 94885 52711ல் பேசலாம்.
