தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி முகாம்

விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி முகாம்

விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி முகாம்


ADDED : ஜன 02, 2024 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2024 05:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாடிப்பட்டி: வாடிப்பட்டி வட்டார வேளாண்துறை சார்பில் தேசிய மின்னணு வேளாண் சந்தையின் பயன்பாடுகள் குறித்த மாவட்ட பயிற்சி முகாம் நடந்தது.

துணை இயக்குனர் (மத்திய திட்டம்) அமுதன் தலைமை வகித்தார். பிரதமரின் விவசாயிகள் கவுரவ ஊக்கத்தொகை, கடன் அட்டை பெறும் வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. விற்பனைக் குழு செயலாளர் மெர்சி ஜெயராணி விற்பனை கூட செயல்பாடுகள் மற்றும் மின்னணு வேளாண்மை குறித்து விளக்கினார்.

உதவி இயக்குனர் பாண்டி நடப்பாண்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினார். அலுவலர் சத்தியவாணி கிடங்குகளில் இடுபொருட்கள் விபரங்களை கூறினார். ஏற்பாடுகளை உதவி அலுவலர் விக்டோரியா செலஸ், தொழில்நுட்ப மேலாளர் பிரியா மற்றும் உதவி மேலாளர்கள் பூமிநாதன், அருணாதேவி செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us