தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாவட்ட நீச்சல் போட்டி

 மாவட்ட நீச்சல் போட்டி

 மாவட்ட நீச்சல் போட்டி


ADDED : ஆக 13, 2026 02:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 02:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான ஆடவர் பிரிவு நீச்சல் போட்டிகள் நடந்தன.

முதல், இரண்டாமிடம் பெற்றவர்கள் மாநில நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

14 வயது பிரிவில் 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் ராஜேந்திரன் முதலிடம், ராகேஷ் 2ம் இடம், ஹர்ஷவர்தன் 3ம் இடம், 50 மீட்டர் பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் ஆகாஷ் பாண்டியன் முதலிடம், தர்ஷன் 2ம் இடம், வைபவ் 3ம் இடம் பெற்றனர்.

17 வயது பிரிவில் 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் ஸ்ரீஹர்ஷன் முதலிடம், அபினேஷ் 2ம் இடம், தங்கபாண்டி 3ம் இடம், 50 மீட்டர் பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் தருண் விஷ்ணு முதலிடம், துகின் 2ம் இடம், சரவணகுமார் 3ம் இடம் பெற்றனர். 19 வயது பிரிவில் 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் ஸ்ரீஹரன் முதலிடம், பவித்ரன் 2ம் இடம், மலையாளம் 3ம் இடம், 200 மீட்டர் பிரிவில் ஸ்ரீஹரன் முதலிடம், பவித்ரன் 2ம் இடம், லோகேஸ்வரன் 3ம் இடம் பெற்றனர்.

50 மீட்டர் பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் அடைக்கலபாண்டி முதலிடம், ஹரித்தீஷ் 2ம் இடம், கோகுல் 3ம் இடம் பெற்றனர். 400 மீட்டர் ப்ரீஸ்டைல் போட்டியில் விஜயபாண்டி முதலிடம், இமாம் சாமி 2ம் இடம், அன்பழகன் 3ம் இடம் பெற்றனர். 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் ஹேமகார்த்திகேயன் முதலிடம், கணேஷ்மூர்த்தி 2ம் இடம், 200 மீட்டர் ஐ.எம்., பிரிவில் கவின் முதலிடம், கார்த்திக் 2ம் இடம், அன்பழகன் 3ம் இடம் பெற்றனர். 1500 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் ஸ்ரீஹரன் முதலிடம், விஜயபாண்டி 2ம் இடம், மோசிக் 3ம் இடம் பெற்றனர்.

மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வினோத், மாநில நீச்சல் சங்க துணைத் தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் தொடங்கி வைத்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட நீச்சல் சங்க செயலாளர் கண்ணன் உடற்கல்வி ஆசிரியர்கள் ஜீவா, ராஜேந்திரன், ஜெயந்தி ஏற்பாடுகளை செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us