
மதுரை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான டேக்வாண்டோ போட்டி வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் நடந்தது. மதுரை அம்பிகை நாராயணன் விளையாட்டு வளாக மாணவர்கள் பதக்கங்களை வென்றனர்.
அழகர்கோவில் சுந்தரேஸ்வரா பள்ளியின் நந்திதா 14 வயதுக்குட்பட்டோர் 29 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார்.
இதே பள்ளி மாணவி ஜீவிதா 17 வயதினருக்கான 35 கிலோ பிரிவில் வெள்ளி வென்றார். 17 வயது 46 கிலோ பிரிவில் மாத்துார் அரசுப்பள்ளி சாதனாஸ்ரீ தங்கம், 14 வயது 38 கிலோ பிரிவில் ஒத்தக்கடை அரசுப் பள்ளி ச.ஜீவிதா வெள்ளிப்பதக்கம், 14 வயது 32 கிலோ பிரிவில் கருங்காலக்குடி அரசுப் பள்ளி பர்ஹானா வெண்கலம், 19 வயது 45 கிலோ பிரிவில் கம்பூர் அரசுப்பள்ளி கதிர்வேல் தங்கம் வென்றனர்.
19 வயது பிரிவில் டான்பாஸ்கோ பள்ளியின் ரோஹித், விஷ்ணு வெண்கலப் பதக்கம் வென்றனர். தங்கப்பதக்கம் வென்றவர்கள் மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
வளாகத் தலைவர்கள் சுந்தரக்கண்ணன், சரவணன், பயிற்சியாளர் கவுரிசங்கர் பாராட்டினர்.