தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 'டிட்டோ ஜாக்' ஆர்பாட்டம்

'டிட்டோ ஜாக்' ஆர்பாட்டம்

'டிட்டோ ஜாக்' ஆர்பாட்டம்


UPDATED : ஆக 20, 2026 10:49 PM

ADDED : ஆக 20, 2026 10:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2026 10:49 PM ADDED : ஆக 20, 2026 10:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:மதுரை மேற்கு கல்வி ஒன்றியம் சார்பில் ஆனையூர் பி.இ.ஓ., அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சார்பில் ஆர்பாட்டம் நடந்தது. தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ராஜாங்கம் தலைமை வகித்தார். ஆசிரியை உமைய பார்வதி வரவேற்றார். மாவட்ட தலைவர் செல்வகுமரேசன், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் ஒச்சுக்காளை, நிர்வாகிகள் பாலசந்திரன், மனோகர் ஜெபத்துரை, சிவபாலன், கவிதா, செல்வராஜ், ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர். இதில், 1999 ல் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்குதல், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆசிரியை லுார்துமேரி நன்றி கூறினார்.

* திருப்பரங்குன்றம் வட்டார கல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உட்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர ஆர்ப்பாட்டம் நடந்தது. முருகன், அழகர்சாமி, அந்தோணி, ஜஸ்டின் திரவியம் கூட்டு தலைமை வகித்தனர். ராமச்சந்திரன் வரவேற்றார். ரமேஷ் பாபு, பிரேம்குமார் விளக்க உரையாற்றினர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேசினார். போஸ்ராஜா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us