/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தீபாவளி முன்பணம்: விண்ணப்பித்த அனைத்து ஆசிரியருக்கும் கிடைக்கும் தினமலர் செய்தி எதிரொலி

ADDED : செப் 23, 2025 05:35 AM
மதுரை: தமிழகத்தில் விண்ணப்பித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் அதிகரிக்கப்பட்ட தீபாவளி முன்பணம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான பண்டிகை முன்பணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாகவும், அரசு ஊழியர்கள், அவர்களின் மகன்,மகளுக்கான திருமணம் முன்பணம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது. இதற்கான அரசாணை ஜூனில் வெளியிடப்பட்டது.
இதையடுத்து கல்வித்துறையில் தீபாவளி முன்பணம் பெறுவதற்கு 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். ஆனால் அதற்கு ஏற்ப கூடுதல் நிதி ஒதுக்கீட்டை அரசு மேற்கொள்ளவில்லை. செப்.,22 வரை அதிகரிக்கப்பட்ட முன்பணத்திற்கான தொகை அரசு பள்ளிகளுக்கான கணக்கு எண்களுக்கு (அக்கவுண்ட் ஹெட்) ஒதுக்கீடு செய்யப்படவில்லை. விண்ணப்பித்த அனைவருக்கும் இந்தாண்டு தீபாவளி முன்பணம் கிடைக்காத சூழல் ஏற்பட்டது.
இதுகுறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக விண்ணப்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் பண்டிகை முன்பணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக நிதித்துறை சார்பில் கருவூலம் மற்றும் கணக்குத்துறை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று அரசு, உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) அனுப்பிய சுற்றறிக்கையில் 'விண்ணப்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் தீபாவளி முன்பணம் பெறுவதற்கான 'பில்' தயார் செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.