நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: கருமாத்துார் கிளாரட் பள்ளியில் தீபாவளி, பள்ளியின் பாதுகாவலர் அந்தோனி மரியா கிளாரட் விழா கருமாத்துார் பங்கு பாதிரியார் பிரேம்நாத் தலைமையில் நடந்தது.
ஆசிரியர் விமலாராணி வரவேற்றார். தலைமை ஆசிரியர் சூசைமாணிக்கம், பொருளாளர் செல்வமணி முன்னிலை வகித்தனர். பள்ளி பாதுகாவலர் கிளாரட்டின் வாழ்க்கை வரலாறை ஆசிரியர்கள் கரோலின், ஜீவன், சாந்தி, அருண் வழிகாட்டுதல்படி மாணவர்களின் வில்லுப்பாட்டு கலை நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினர். புகைப்பட கண்காட்சியும் நடந்தது. ஆசிரியர் சகாயராஜ் நன்றி கூறினார். ஆசிரியர்கள், என்.எஸ்.எஸ்., மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.