/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆயிரம் வேட்டி, சேலைகள் வழங்கிய அமைச்சர் தி.மு.க.,வினருக்கு தீபாவளி பரிசு
/
ஆயிரம் வேட்டி, சேலைகள் வழங்கிய அமைச்சர் தி.மு.க.,வினருக்கு தீபாவளி பரிசு
ஆயிரம் வேட்டி, சேலைகள் வழங்கிய அமைச்சர் தி.மு.க.,வினருக்கு தீபாவளி பரிசு
ஆயிரம் வேட்டி, சேலைகள் வழங்கிய அமைச்சர் தி.மு.க.,வினருக்கு தீபாவளி பரிசு
ADDED : அக் 11, 2025 04:29 AM
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டையில் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் சோழவந்தான் தொகுதி நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு, நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
இத்தொகுதியில் அலங்காநல்லுாரில் 4, வாடிப்பட்டி 2, மதுரை மேற்கில் ஒன்று என 7 ஒன்றியங்கள், 65க்கும் மேற்பட்ட ஊராட்சிகள், 4 பேரூராட்சிகள் உள்ளன.
இதில் மாவட்ட பிரதிநிதிகள், பொறுப்பாளர்கள், அவைத் தலைவர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர செயலாளர்கள், கிளைச் செயலாளர், பூத் கமிட்டி நிர்வாகிகள், இளைஞரணி, விவசாயம், தகவல் தொழில்நுட்பம், மீனவர், மகளிர் உள்ளிட்ட 21 அணிகளில் 7 ஆயிரம் நிர்வாகிகள் உள்ளனர்.
இதில் மகளிரணிக்கு ரூ.ஆயிரத்துடன், ரூ.500 மதிப்பிலான ஜரிகை சேலை, ஆண்களுக்கு ரூ.ஆயிரத்துடன் கட்சி வேட்டி, சட்டை என அனைவருக்கும் அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
கடந்தாண்டுகளில் நிர்வாகிகளுக்கு ரூ.ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை பதவிக்கு ஏற்ப வழங்கப்பட்டது. 2026 தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு அனைத்து நிர்வாகிகளுக்கும் ஒரே மாதிரி பரிசு வழங்கப்பட்டுள்ளது.
தேனி லோக்சபா தேர்தலில் 58 ஆயிரம் ஓட்டுகள் பெற்றுத் தந்த சோழவந்தான் தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை 75 ஆயிரமாக அதிகரிக்க கட்சி பாகுபாடின்றி அனைவருக்கும் 'டிபன் பாக்ஸ்' நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டது.