/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் தீபாவளி 'பார்க்கிங்' இடங்கள் இன்று முதல் போக்குவரத்திலும் மாற்றம் உண்டு
/
மதுரையில் தீபாவளி 'பார்க்கிங்' இடங்கள் இன்று முதல் போக்குவரத்திலும் மாற்றம் உண்டு
மதுரையில் தீபாவளி 'பார்க்கிங்' இடங்கள் இன்று முதல் போக்குவரத்திலும் மாற்றம் உண்டு
மதுரையில் தீபாவளி 'பார்க்கிங்' இடங்கள் இன்று முதல் போக்குவரத்திலும் மாற்றம் உண்டு
ADDED : அக் 17, 2025 02:03 AM
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல மதுரை நகரில் இன்று(அக்.17) முதல் அக்.20 வரை தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள், 'பார்க்கிங்' வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கனரக, இலகுரக வாகனங்கள் இன்று முதல் பகலில் மஹால் ரோடு, கீழமாரட் வீதி, மாசி வீதிகள், ஆவணி வீதிகளில் இலகுரக சரக்கு வாகனங்கள் உட்பட எந்த ஒரு சரக்கு வாகனத்துக்கும் அனுமதி இல்லை.
பைபாஸ் சாலை, காமராஜர் ரோடு, அண்ணாநகர் 80 அடிரோடு, கே.கே. நகர் 80 அடி ரோடு, அழகர்கோவில் ரோட்டில் மூன்றுமாவடி சந்திப்பு, புதுநத்தம் ரோடு - அய்யர்பங்களா சந்திப்பு, திண்டுக்கல் ரோடு கூடல்நகர் சந்திப்பு, அவனியாபுரம் பெரியார் சிலை சந்திப்பு, சிவகங்கை ரிங்ரோடு சந்திப்பு, மீனாட்சி மருத்துவமனை சந்திப்புகளில் இருந்து நகருக்குள் நுழைய லாரிகள், கனரக வாகனங்கள் (பயணிகள் வாகனங்கள் தவிர்த்து) வந்து செல்ல அனுமதி இல்லை. இரவு 11:00 மணி முதல் மறுநாள் (அக்.18) காலை 6:00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
அக்.18, 19ல் காலை, இரவு நேரம் முழுவதும் மதுரை நகருக்குள் மேற்படி ரோடுகளில் லாரிகள், கனரக வாகனங்கள், இலகுரக சரக்கு வாகனங்கள் வந்து செல்ல அனுமதி இல்லை.
பொதுமக்களின் வாகனங்கள் அக்.18,19ல் நேதாஜி ரோடு, மேலமாசிவீதி, தெற்குமாசிவீதி, கீழமாசிவீதி, மேலாவணி மூல வீதி, கீழாவணி மூல வீதி, தெற்காவணி மூல வீதிகளில் டூவீலர் தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை. தேவைப்படும் பட்சத்தில் டூவீலர் போக்குவரத்தும் தடை செய்யப்படும். மகால் ரோடு, கீழமாரட் வீதி வழியாக வாகனங்கள் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படும். 'பார்க்கிங்' அனுமதி இல்லை.
'பார்க்கிங்' அனுமதி இடங்கள் இன்று முதல் அக்.20 அதிகாலை வரை மாசிவீதி, ஆவணி மூல வீதி பகுதிகளுக்கு வரும் நான்கு சக்கர வாகனங்கள் வடக்கு ஆவணி மூல வீதி மல்டி லெவல் கட்டண பார்க்கிங்கில் நிறுத்த வேண்டும். விரகனுார் பகுதி, காமராஜர் ரோட்டில் வருவோர் வாகனங்களை சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியிலும், கீழவெளிவீதி, தெற்குமாரட்வீதி, தெற்குவெளி வீதியிலிருந்து வரும் வாகனங்கள் செயின்ட் மேரீஸ் பள்ளி மைதானத்திலும் 'பார்க்கிங்' செய்ய வேண்டும்.
திருப்பரங்குன்றம் பகுதியில் இருந்து வருவோர் மதுரை கல்லுாரி மைதானத்திலும், பைபாஸ் ரோடு, எல்லீஸ் நகர், காளவாசல், மேலவெளி வீதியில் இருந்து வருவோர் ரயில்வே வாகன காப்பகம் மற்றும் சேதுபதி பள்ளி மைதானத்திலும் 'பார்க்கிங்' செய்ய வேண்டும்.
நத்தம் ரோடு, அழகர்கோவில் ரோட்டில் இருந்து கோகலே ரோட்டில் உள்ள வணிக வளாகங்களுக்கு வருவோர் ஒய்.எம்.சி.ஏ., பள்ளி மைதானத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
மாசி வீதிகள் உள்ளிட்ட இடங்களில் டூவீலர் 'பார்க்கிங்' குறித்து போலீசார் ஆங்காங்கே அறிவிப்புகள் வைத்துள்ளனர்.