ADDED : அக் 19, 2025 10:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: தீபாவளியையொட்டி புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் வாங்க பேரையூர் கடைவீதியில் பொதுமக்கள் குவிந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
இன்று தீபாவளி கொண்டாடும் நிலையில் சுற்றுவட்டார கிராமத்தினர் பேரையூரில் குவிந்தனர். கடைவீதியெங்கும் மக்கள் புத்தாடை. இனிப்புகள், பட்டாசுகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதியது.
தீபாவளி சீசன் கடைகள் பல ரோட்டோரம் உருவாகி இருந்தன. சாலையோரங்களில் பூக்கடைகள், பழக்கடைகள், தற்காலிக ஜவுளிக் கடைகள், வீட்டு உபயோக பொருள் வியாபாரிகள் ஏராளமாக இருந்தனர். தீவாளி பண்டிகைக்காக மக்கள் அதிக அளவில் பொருட்களை வாங்கிச் சென்றனர்.