/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பாவங்களை தொலைக்கிற நாள்தான் தீபாவளி எழுத்தாளர்; இந்திரா சௌந்தர்ராஜன் பேச்சு
/
பாவங்களை தொலைக்கிற நாள்தான் தீபாவளி எழுத்தாளர்; இந்திரா சௌந்தர்ராஜன் பேச்சு
பாவங்களை தொலைக்கிற நாள்தான் தீபாவளி எழுத்தாளர்; இந்திரா சௌந்தர்ராஜன் பேச்சு
பாவங்களை தொலைக்கிற நாள்தான் தீபாவளி எழுத்தாளர்; இந்திரா சௌந்தர்ராஜன் பேச்சு
ADDED : நவ 03, 2024 05:24 AM
மதுரை: ''தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை தொலைக்கிற நாள்தான் தீபாவளி,'' என எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேசினார்.
அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் அனுஷம் வைபவ சிறப்பு நிகழ்ச்சி மதுரை எஸ்.எஸ்.காலனி எஸ்.எம்.கே.திருமண மண்டபத்தில் நடந்தது. 'ஸ்ரீ மஹா பெரியவா மகிமை' தலைப்பில் இந்திரா சௌந்தரராஜன் பேசியதாவது:
நம் கர்மங்களை போக்கும் நாள் தீபாவளி. மஹா பெரியவா சர்.சி.வி.ராமசாமி ஐயரிடம் 'கங்கா ஸ்நானம் ஆச்சா' என்றால் என்னவென தெரியுமா என்றார். அவரே,'எல்லோரும் கங்கையை நினைத்து மகாலட்சுமி அனுக்கிரகம் பெற்று காலை நேரம் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். உலகில் நரகாசுரன் மட்டும் பாவம் செய்தவன் அல்ல. நாம் எல்லோருமே ஒருவிதத்தில் தெரிந்தும், தெரியாமலும் பாவங்கள் செய்கிறோம். அவற்றை தொலைக்கிற நாள்தான் தீபாவளி. பாவங்களை குறைக்க அருளப்பட்ட நாள்தான் தீபாவளி. அதனால் தான் கங்கா ஸ்நானம் ஆச்சா என கேட்கிறோம்,' என பதில் சொன்னார்.
மேலும் பெரியவர், 'அவதாரங்களில் தனக்கு பிடித்தது கிருஷ்ண அவதாரம். அது பரிபூரணமானது. ஏனெனில் கிருஷ்ணனை எல்லோருக்கும் பிடிக்கும். தர்மத்தை பாதுகாக்க பாடுபட்டவர்,' என்றார்.
ஒரு நாளைக்கு ஒரு நல்ல செயலாவது செய்ய வேண்டும் என்கிறார் மஹா பெரியவர். நல்ல வார்த்தையும் பேச வேண்டும். பாவம் செய்வது நம் கையில் இல்லை. புண்ணியம் செய்வது நம் கையில் உள்ளது என்றார். வாழ்வில் ஏற்படுகிற எல்லா கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்துள்ளார்.
ஒரு குரு மனது வைத்தால் தங்கமாக பொழியும் என்பதை உலகிற்கு காட்டியவர் ஆதிசங்கரர். குருவின் நயன தீட்சை சிறப்பானது. அதனால் தான் மகான்கள் ஒரு ஊருக்கு வந்தால் அவரை தரிசிக்க வேண்டும் என்கிறார்கள். அது நம் பாவம் போக்கும் என்றார். அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடு செய்திருந்தார்.