/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜன. 3ல் தி.மு.க., செயல்வீரர் கூட்டம்
/
ஜன. 3ல் தி.மு.க., செயல்வீரர் கூட்டம்
ADDED : ஜன 01, 2025 05:51 AM
மதுரை : அமைச்சர் மூர்த்தி அறிக்கை: தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றது. இந்த போட்டி தடைபட்டபோது முதலில் சட்டப் போராட்டம் கண்டு மீட்டவர் கருணாநிதி. அதேபோல மீண்டும் தடை கண்ட ஜல்லிக்கட்டை மீட்க பெரும் முயற்சி மேற்கொண்டவர் முதல்வர் ஸ்டாலின்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டி ஜன.16 ல் நடக்க உள்ளது. இதனை துவக்கி வைக்க துணை முதல்வர் உதயநிதி வருகிறார். அவரை வரவேற்பது மற்றும் தி.மு.க.,வின் ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசிக்க மதுரை வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நாளை மறுநாள் (ஜன.3) காலை 10:00 மணிக்கு ஆலத்துாரில் உள்ள பி.ஆர்., திருமண மஹாலில் நடக்க உள்ளது. இதில் அனைத்து பிரிவு நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.