தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தி.மு.க., கவுன்சிலர் தரப்பு புகார் மீதும் வழக்குப்பதிவு

தி.மு.க., கவுன்சிலர் தரப்பு புகார் மீதும் வழக்குப்பதிவு

தி.மு.க., கவுன்சிலர் தரப்பு புகார் மீதும் வழக்குப்பதிவு


UPDATED : ஜூலை 08, 2026 06:49 PM

ADDED : ஜூலை 08, 2026 06:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 08, 2026 06:49 PM ADDED : ஜூலை 08, 2026 06:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை கீழவெளிவீதி ஜாகீர்உசேன். பனையூர் கால்வாய் ஆக்கிரமிப்பு குறித்து புகார் செய்த நிலையில் தி.மு.க., கவுன்சிலர் செய்யது அபுதாகீர் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து மிரட்டியதாக போலீசில் புகார் அளித்தார். செய்யது அபுதாகீர், அவரது மகன்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதேபோல் கவுன்சிலர் தரப்பில் அவரது மகன் சதாம் உசேன் அளித்த புகாரில், ஜாகீர் உசேனுக்கு கவுன்சிலர் 'சீட்' கிடைக்கவில்லை என்பதால் என் தந்தை மீது தொடர்ந்து அவதுாறை பரப்பி வருகிறார். ஆதாரமில்லாமல் பொய் புகார்களை அனுப்பி வருகிறார். வாட்ஸ் ஆப்பில் என் தந்தை, சகோதரர் குறித்து தவறான, அவதுாறான செய்திகளை பதிவிட்டிருந்தார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது ஆபாசமாக திட்டியதோடு கொலை மிரட்டல் விடுத்தார் என தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் ஜாகிர்உசேன் மீது விளக்குத்துாண் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us