ADDED : ஜூலை 08, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: ஆஸ்டின்பட்டி ரூட்செட் பயிற்சி நிலையத்தில் ஜூலை 22 முதல் 12 நாட்களுக்கு துரித உணவுகள் தயாரித்தல் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.
தினமும் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும் இம்முகாமில் 18 முதல் 50 வயதுள்ள ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜூலை 21க்குள் 94456 00561ல் முன்பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சி, உணவு, தங்குமிடம் இலவசம். கிராமப்புற நபர்கள், 100 நாட்கள் வேலை அட்டை உள்ள குடும்பத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சிக்கு வருபவர்கள் இரண்டு பாஸ்போர்ட் போட்டோ, ஆதார், வாக்காளர் அட்டை, ஸ்மார்ட் கார்டு நகல் கொண்டு வர வேண்டும் என இயக்குனர் பாலாஜி தெரிவித்தார்.
