ADDED : ஜூலை 08, 2026 06:30 PM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுார் நகராட்சி வார்டு 21 மலம்பட்டியில் 15 நாட்களுக்கும் மேலாக காவிரி கூட்டு குடிநீர் வழங்கவில்லை.
இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் மக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நேற்று காலி குடங்களுடன் சிவகங்கை ரோட்டில் அரைமணி நேரம் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. டி.எஸ்.பி., சிவக்குமார் சமரசம் செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
