நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மறைந்து ஒரு மாதமானதைத் தொடர்ந்து மதுரையில் தொண்டர்கள் நேற்று விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.
மேலஆவணி மூலவீதியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகம் முன்பு விஜயகாந்த் உருவப்படத்தை வைத்து மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் மலர்கள் துாவி, விளக்கேற்றினர். முப்பதுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் மொட்டை அடித்துக் கொண்டனர். முன்னதாக ஜெய்ஹிந்துபுரத்தில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் மோட்சதீபம் ஏற்றினர்.

