/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தி.மு.க., திண்ணை பிரசாரம் துவக்கம்
/
தி.மு.க., திண்ணை பிரசாரம் துவக்கம்
ADDED : பிப் 28, 2024 05:10 AM
மதுரை : மதுரையில் தி.மு.க., சார்பில் 'இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்' என்ற திண்ணைப் பிரசாரத்தை மூன்றுமாவடி மகாலட்சுமி நகரில் அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.
இதுதொடர்பாக மக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. அப்போது அமைச்சர் 'ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மகளிர் இலவச டவுன் பஸ்களில் பயணம் செய்துள்ளனர். மாதம் ரூ.ஆயிரம் மகளிர் உரிமைத் தொகையால் பெண்கள் மிகுந்த பயனடைந்துள்ளனர். மாநகராட்சி மக்களுக்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நேரடியாக வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டப்பணிகள் முடிந்துள்ள நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்படும்' என பிரசாரம் செய்தார். வெங்கடேசன் எம்.எல்.ஏ., பகுதிச் செயலாளர் மருதுபாண்டியன், கவுன்சிலர் பால் செல்வி பங்கேற்றனர்.

