ADDED : பிப் 04, 2026 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது. அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ராஜா, இளையராஜா, எம்.எல்.ஏ., வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமைச்சர் பேசுகையில் விருதுநகரில்பிப்., 7ல் நடக்கும் தி.மு.க., இளைஞரணி தென்மண்டல மாநாட்டில் வடக்கு மாவட்டம் சார்பில் 10 ஆயிரம் இளைஞரணி உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் என்றார்.

