/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தி.மு.க., கவுன்சிலர் அடாவடியால் ஓய்வு பெண் பி.டி.ஓ., தற்கொலை
/
தி.மு.க., கவுன்சிலர் அடாவடியால் ஓய்வு பெண் பி.டி.ஓ., தற்கொலை
தி.மு.க., கவுன்சிலர் அடாவடியால் ஓய்வு பெண் பி.டி.ஓ., தற்கொலை
தி.மு.க., கவுன்சிலர் அடாவடியால் ஓய்வு பெண் பி.டி.ஓ., தற்கொலை
ADDED : பிப் 07, 2026 05:52 AM
மதுரை: மதுரையில் தி.மு.க., பெண் கவுன்சிலரிடம் வாங்கிய கடனுக்கு தவணை செலுத்த தாமதம் ஆனதால் அவரது மகன் உள்ளிட்டோர் வாகனத்தை பறித்துச் சென்றனர். இதில் வேதனை அடைந்த ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி (பி.டி.ஓ.,) பெண் அலுவலர் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மதுரை ரேஸ்கோர்ஸ் அரசு குடியிருப்பில் வசித்தவர் சூரியகாந்தி 62. ஓய்வுபெற்ற பி.டி.ஓ., இவர் மதுரை காந்திபுரத்தைச் சேர்ந்த தி.மு.க., பெண் கவுன்சிலரான ராதா என்பவரின் மருமகள் சோபியாவிடம் ரூ.50 ஆயிரம் வாரத்தவணைக்கு கடன் வாங்கினார். முறையாக செலுத்தாததால் ராதா மகன் பிரபு தலைமையில் வந்த சிலர் சூர்யகாந்தி வீட்டில் இருந்த மினிசரக்கு வாகனத்தை எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து நேரில் கேட்ட சூரியகாந்தியை ராதா தரப்பினர் சத்தம் போட்டு தாக்க முற்பட்டனர். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான சூரியகாந்தி தனது இறப்புக்கு ராதா, பிரபு , சோபியா, அனு ஆகியோர்தான் காரணம் என்று கூறி டைரியில் எழுதி வைத்துவிட்டு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.