/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
/
நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ADDED : டிச 25, 2025 06:20 AM
மதுரை: உசிலம்பட்டி நகராட்சி கவுன்சில் கூட்டம் துணை தலைவர் தேன்மொழி தலைமையில் நடந்தது.20 தீர்மானங்கள் ஒப்புதலுக்கு கொண்டு வந்தனர்.
அதில் உசிலம்பட்டி சந்தை திடல் கடைகளுக்கு பழைய வாடகை வசூலிக்க வேண்டும். பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்திற்காக அப்புறப்படுத்தப்படும் கடைகளுக்கு மாற்று இடம் வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. தி.மு.க., கவுன்சிலர்கள் (வார்டு 5) சந்திரன், (வார்டு 12)ஷோபனாதேவி எதிர்ப்பு தெரிவித்தனர்.
'ஏற்கனவே கடை வைத்துள்ளவர்கள் ரூ.6 கோடிக்கும் மேல் வாடகை பாக்கி வைத்துள்ளனர். இவர்களிடம் அதிகாரிகள், தி.மு.க., வினர் முறைகேடாக பணம் பெற்றுக்கொண்டு கடைகளை அவர்களுக்கே கொடுக்க முயற்சிக்கிறீர்கள். இ--டெண்டர் மூலம் கடைகளை ஏலம் விட வேண்டும்' என்றனர். 'இ-டெண்டரால் நிதிஇழப்பு ஏற்படும்' என கமிஷனர் இளவரசன் கூறினார். துணைத்தலைவர், தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அமைதி காத்ததால் சந்திரன், ஷோபனாதேவி வெளிநடப்பு செய்தனர்.