/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொழிலாளர் வாரியத்தில் ஆட்டோவுக்கு மானியம்
/
தொழிலாளர் வாரியத்தில் ஆட்டோவுக்கு மானியம்
ADDED : டிச 25, 2025 06:21 AM
மதுரை: தமிழ்நாடு அரசு சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்காக நலவாரியம் செயல்படுகிறது. அமைப்புசாரா ஓட்டுனர்கள், தானியங்கி மோட்டார் வாகனங்கள், பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பெண், திருநங்கை ஓட்டுனர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்க மானியமாக ரூ. ஒரு லட்சம் வழங்கும் வகையில் ஆயிரம் பெண்களுக்கு ஆட்டோ வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் 833 பேரும், திருநங்கையர் 53 பேரும், இணையம் சார்ந்த 'கிக்' தொழிலாளர்கள் 10 பேர் உட்பட ரூ.8 கோடியே 88 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற்ற ஊமச்சிக்குளம் உமா கூறுகையில், ''நானும், கணவரும் வாடகை ஆட்டோ ஓட்டுனர்கள். மானிய திட்டம் அறிந்து வாரியத்தில் பதிவு செய்தேன். ரூ.ஒரு லட்சம் மானியத்தில் அரசு ஆட்டோ வழங்கியது வாழ்வாதாரம் உயர உதவியது'' என்றார்.

