தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கூட்டணி கட்சிகளை தி.மு.க., அவமதிப்பது கிடையாது

 கூட்டணி கட்சிகளை தி.மு.க., அவமதிப்பது கிடையாது

 கூட்டணி கட்சிகளை தி.மு.க., அவமதிப்பது கிடையாது


ADDED : பிப் 14, 2026 07:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 07:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை முனிச்சாலையில், தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது. நகர் செயலாளர் தளபதி தலைமை வகித்தார்.

அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசிய தாவது:


சசிகலாவை எனக்கு உண்மையில் பிடிக்காது. நான் ஒருத்தர் இருப்பதையே மறந்து விட்டார்கள் என அவர் கூறுகிறார். அவரை யார் இப்போது தேடிக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் கட்சியில் இருங்கள்; இல்லாமல் போங்கள்.

பழனிசாமிதான் உங்களை சேர்க்க மாட்டேங்கிறாரே. அ.தி.மு.க., வில் தொண்டர்கள் கிடையாது. அங்கே இருப்பவர்கள் எம்.எல்.ஏ., சீட்டுக்காக உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

மதுரை விமான நிலையத்தில் பன்னீர் செல்வத்திடம், 'நீங்கள் ஏன் எம்.பி., தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறீர்கள்; 25 ஆண்டுகளாக உங்கள் சமுதாய மக்களுக்கு என்ன செய்தீர்கள்' என்று கேட்டேன்.

கூட்டணி கட்சிகளை தி.மு.க., அவமதிப்பது கிடையாது. உள்ளதையே எடுத்துச் சொன்னோம். உதயசூரியன் என்றால் தான் மக்கள் ஓட்டளிப்பர். கூட்டணி வேண்டாம் என்று சொல்ல எங்களுக்கு உரிமை இல்லை. ஆனால் முதல்வர் ஸ்டாலின், 'ஆட்சியில் பங்கு கிடையாது' என்று தெளிவாக சொல்லி விட்டார்.

நீதிமன்றத்தை நான் குறை சொல்ல மாட்டேன். ஆனால் தேர்தல் ஆணையம் ஒரு பக்கமாக செல்கிறது.

சிதம்பரத்திற்கு எதிராக எம்.பி., தேர்தலில் ஓட்டை மாற்றி போட்டு, என்னவோ செய்தார்கள். தோல்வியை பற்றி நான் கவலைப்படவில்லை. தேர்தலை பற்றி கவலைப்படுபவன் அரசியல்வாதியாக இருக்க முடியாது.

பாரிவேந்தர் கல்லுாரி வைத்துக் கொண்டு வசதியாக இருக்கிறார். கடந்த தேர்தலில் ஜான் பாண்டியன் என்னை எதிர்த்து முது குளத்துாரில் போட்டியிட்டார். 'நீ ஏம்பா எதிர்ப்பா வர்ற; உன் பையனுக்கு நான் தான் ரூ.2 கோடிக்கு மருத்துவத்திற்கான எம்.டி., சீட் வாங்கி கொடுத்தேனே' என்றேன். பேசாமல் சென்று விட்டார்.

பின் தன் மகன் திரு மணத்திற்கு அழைத்தார். பின் முதல்வர் ஸ்டாலினிடம், 'ஒடுக்கப்பட்ட சமூகம்; நாம் யாரிடம் வித்தி யாசம் பார்ப்பதில்லை. போயிட்டு போறான்' என்று நான் கூறி திரு மணத்தை நடத்தி வைத்தோம்.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us