/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் நாளை தி.மு.க., கண்காட்சி
/
மதுரையில் நாளை தி.மு.க., கண்காட்சி
ADDED : பிப் 15, 2024 05:51 AM
மதுரை: மதுரையில் தி.மு.க., இலக்கிய அணி சார்பில் கருணாநிதி நுாற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி, கலந்துரையாடல் கூட்டம் பாண்டிகோயில் அருகே துவாரகா கல்யாண மண்டபத்தில் நாளை, நாளை மறுநாள் (பிப். 16, 17) நடக்கிறது.
மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி, தளபதி, மணிமாறன் தெரிவித்துள்ளதாவது: கருணாநிதி நுாற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக இந்த 2 நாட்கள் புகைப்படக் கண்காட்சி, கலந்துரையாடல் கூட்டம் நடக்கிறது.
இதில் தேர்தல் பிரசார குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன், கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், எழுத்தாளர் மதிமாறன் பேசுகின்றனர். காலை 9:00 முதல் இரவு 7:00 மணி வரை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

