ADDED : மார் 19, 2024 06:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : அ.வல்லாளபட்டி 3வதுவார்டில் ஏற்கனவே தி.மு.க. கொடி கம்பம் இருந்த இடத்தில் கருணாநிதி நுாற்றாண்டை முன்னிட்டு புதிதாக கொடி கம்ப மேடை மற்றும் கல்வெட்டு அமைக்கப்பட்டது. நேற்று அவை உடைக்கப்பட்டிருந்தன.
நகர் செயலாளர் கார்த்திகேயன் மேலவளவு போலீசில் புகார் கொடுத்தார். இந்த இடம் வேன்கள் நிறுத்துமிடமாக பயன்படுத்தி வருவதால் வாகனங்கள் மோதியதில் உடைந்ததா என போலீசார் விசாரிக்கின்றனர்.

