ADDED : நவ 21, 2025 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் பகுதிகளில் வாக்காளர் சிறப்பு சீர்திருத்தப் (எஸ்.ஐ.ஆர்.,) பணிகளுக்காக பொதுமக்களுக்கு உதவிட மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., முன்வந்துள்ளது. இதற்கான மையத்தை திருமங்கலம் தாலுகா அலுவலக வாயிலில் மாவட்டச் செயலாளர் மணிமாறன் திறந்து வைத்தார்.
வாக்காளர் கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்தல், பழைய வாக்காளர் பட்டியலில் பெயர் பட்டியலை தேர்வு செய்தல் உள்ளிட்ட சேவையை பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில் மையம் செயல்படும். நகரச் செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி தலைவர் ரம்யா, துணைத் தலைவர் ஆதவன், கவுன்சிலர்கள் வீரகுமார், ரவி, முன்னாள் நகராட்சி தலைவர் நிரஞ்சன், வக்கீல்கள் செந்தில்நாதன், கவி ஸ்ரீ பங்கேற்றனர்.

