ADDED : அக் 06, 2024 03:34 AM

திருப்பாலை : மதுரை மாவட்ட தி.மு.க., மகளிர் அணி, தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டம் திருப்பாலையில் நடந்தது. மாநில செயலாளர் ஹெலன் டேவிட்சன் தலைமை வகித்தார். மண்டல பொறுப்பாளர் பவானி ராஜேந்திரன் வரவேற்றார்.
அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:நம்முடைய ஆட்சி மகளிருக்கானது. முதல்வரும், துணை முதல்வரும் பல்வேறு நலத்திட்டங்களில் மகளிருக்கு முன்னுரிமை கொடுத்து செய்து வருகின்றனர். ஓட்டு சேகரிக்க உங்களுடைய பங்கு முக்கியத்துவம் கொண்டது.துணை முதல்வர் மதுரை வந்தபோது 23 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். அதில் 20 ஆயிரம் பேர் மகளிர். விரைவில் நகரில் தகுதியுள்ளோர் அனைவருக்கும்பட்டா வழங்கப்படும். தமிழகத்திலேயே மகளிர் உறுப்பினர் சேர்க்கையில் மதுரை மாவட்டம் முதலிடம் பெற வேண்டும் என்றார்.
எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, வெங்கடேசன், தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், மாநகராட்சி மண்டல தலைவர் வாசுகி, வடக்கு மகளிரணி அமைப்பாளர் உமா, தெற்கு தொண்டர் அணி அமைப்பாளர் பிரமிளா, நகர் அமைப்பாளர் சரவண புவனேஸ்வரி, தொண்டர் அணி அமைப்பாளர் நுார்ஜகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.