/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரைக்கு மேயர் யார் நவ.6 ல் உதயநிதி முடிவு விமர்சனங்களுக்கு 'செக்' வைக்க தி.மு.க., திட்டம்
/
மதுரைக்கு மேயர் யார் நவ.6 ல் உதயநிதி முடிவு விமர்சனங்களுக்கு 'செக்' வைக்க தி.மு.க., திட்டம்
மதுரைக்கு மேயர் யார் நவ.6 ல் உதயநிதி முடிவு விமர்சனங்களுக்கு 'செக்' வைக்க தி.மு.க., திட்டம்
மதுரைக்கு மேயர் யார் நவ.6 ல் உதயநிதி முடிவு விமர்சனங்களுக்கு 'செக்' வைக்க தி.மு.க., திட்டம்
ADDED : நவ 04, 2025 05:18 AM
மதுரை: மதுரை மாநகராட்சிக்கு புதிய மேயரை முடிவு செய்யும் பொறுப்பு துணைமுதல்வர் உதயநிதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இம்மாநகராட்சியில் நடந்த ரூ.150 கோடிக்கும் மேலான சொத்துவரி முறைகேடு விவகாரம், அதன் எதிரொலியாக நடந்த மண்டலம், நிலைக்குழுத் தலைவர்கள், மேயர் ராஜினாமா அரசியல் ரீதியாக ஆளுங்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அந்த பதவிகளில் தகுதியான கவுன்சிலர்களை முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலினால் நியமிக்க முடியவில்லையா' என அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
இதற்கிடையே அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் இடையே யாருடைய ஆதரவாளர்களை மேயராக்குவது என்ற பனிப்போர் உச்சத்தில் உள்ளது. இதில் அமைச்சர் மூர்த்தி கையே ஓங்கியுள்ளது என்றாலும் மேயர் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டது. சென்னையை அடுத்து பெரிய மாநகராட்சியான மதுரையில் மேயர் இல்லை, மண்டல தலைவர்கள் இல்லை, மாமன்றக் கூட்டம் நடக்கவில்லை, நிதி ஒதுக்கீடு இல்லாததால் வார்டுகளில் பணிகள் முடங்குவது உள்ளிட்ட பிரச்னைகளால் மக்களும், தி.மு.க., நிர்வாகிகளும் அதிருப்தியில் உள்ளனர்.
இதற்கிடையே தற்போது எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் துவங்கியுள்ளதால் மாநகராட்சியில் மேயர், மண்டல, நிலைக்குழு தலைவர்கள் பதவிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவே மேயரை விரைவில் தேர்வு செய்ய தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது. அப்பொறுப்பை உதயநிதியிடம் முதல்வர் ஸ்டாலின் ஒப்படைத்துள்ளதாக தி.மு.க., வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.
தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை வந்த முதல்வர் இதுகுறித்து முடிவு எடுக்க நினைத்தார். ஆனால் துாத்துக்குடி, தென்காசி நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு இரவு தங்க அரசு விருந்தினர் மாளிகைக்கு 10:30 மணிக்கும் மேல் வந்த முதல்வர், அங்கு தங்கியிருந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தார். இதனால் மேயர் விஷயம் குறித்து ஆலோசிக்கவில்லை.
இதற்கிடையே தற்போது உதயநிதியிடம் அப்பொறுப்பை முதல்வர் ஒப்படைத்துள்ளார். அவரும் அமைச்சர் மூர்த்தி சிபாரிசு அடிப்படையில் மூவர் கொண்ட புதிய 'லிஸ்ட்'டை தயாரித்துள்ளார். உலக ஹாக்கி போட்டிகள் மதுரையில் நடக்கவுள்ளதையொட்டி அதற்கான முன்பணிகள், மைதானத்தை நவ.,6 அல்லது 7ல் பார்வையிட உதயநிதி மதுரை வருகிறார். அப்போது புதிய மேயரை முடிவு செய்வதற்கு வாய்ப்புள்ளது.
இதன் மூலம் அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனங்களுக்கு தி.மு.க., 'செக்' வைக்கும் என்றனர்.

