/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கவர்னரை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
கவர்னரை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 08, 2025 06:31 AM

மதுரை: மதுரையில் நகர் தி.மு.க., சார்பில் தமிழக கவர்னர் ரவி மற்றும் அ.தி.மு.க., பா.ஜ., கட்சிகளை கண்டித்து முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம் தலைமையில் பெத்தானியாபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அவைத் தலைவர் ஒச்சுபாலு, தணிக்கை குழு உறுப்பினர் வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, மகளிரணி மாவட்ட தலைவர் சரவணபுவனேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சம்மட்டிபுரம் சிவக்குமார் தலைமையில் கவர்னர் ரவியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வாடிப்பட்டி: புறநகர் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பொதுக்குழு சேகர், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருமங்கலம் : தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் செயலாளர் மணிமாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., லதா, செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டி, நகர் செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி தலைவர் ரம்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.