/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வாய்ப்பூட்டு தி.மு.க.,; வெளிநடப்பு அ.தி.மு.க., மாநகராட்சி கூட்டத்தில் நாளை 'லகலக'
/
வாய்ப்பூட்டு தி.மு.க.,; வெளிநடப்பு அ.தி.மு.க., மாநகராட்சி கூட்டத்தில் நாளை 'லகலக'
வாய்ப்பூட்டு தி.மு.க.,; வெளிநடப்பு அ.தி.மு.க., மாநகராட்சி கூட்டத்தில் நாளை 'லகலக'
வாய்ப்பூட்டு தி.மு.க.,; வெளிநடப்பு அ.தி.மு.க., மாநகராட்சி கூட்டத்தில் நாளை 'லகலக'
ADDED : ஜூலை 28, 2025 03:32 AM
மதுரை : மதுரை மாநகராட்சியில் ரூ.பல கோடி சொத்துவரி முறைகேடு தொடர்பான புகாரில் மண்டல, நிலைக் குழு தலைவர்கள் 7 பேர் பதவியிழப்பு, மாநகராட்சி அலுவலர்கள் கைது, அ.தி.மு.க.,வின் நீதிமன்ற வழக்கு, முறைகேட்டை விசாரிக்க ஐ.பி.எஸ்., அதிகாரி தலைமையில் குழு என பரபரப்புக்கு பஞ்சமில்லாத நிலையில் நாளை (ஜூலை 29) கவுன்சில் கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடக்கிறது.
இந்நிலையில், தி.மு.க., கவுன்சிலர்கள் 'தங்கள் வார்டுகளில் தனியார் கட்டடங்களுக்கு வரிக் குறைப்பு, கட்டட அனுமதி குறித்து கேள்விகள் கேட்க கூடாது' என அக்கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. அதேநேரம் அ.தி.மு.க.,வும் கூட்டத்தை புறக்கணிக்கும் முடிவில் உள்ளதால் இம்மாதக் கூட்டம் மக்களுக்கு எந்த வகையில் பயன் உள்ளதாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தி.மு.க.,வுக்கு வாய்ப்பூட்டு வழக்கமாக ஒவ்வொரு கூட்டத்திலும் கேள்வி எழுப்ப ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் ஆர்வத்துடன் முன்கூட்டியே கேள்விகள் எழுதி மேயருக்கு அனுப்பி வைப்பர்.
ஆனால் சொத்துவரி முறைகேடு மாநகராட்சியை புரட்டிப்போட்டுள்ள நிலையில், தி.மு.க.,வில் உள்குத்து அரசியலை கிளப்பும் வகையில் மேயரை 'டார்க்கெட்' செய்து சில கவுன்சிலர்கள் கேள்விகளை எழுதி அனுப்பி வைத்தனர்.ஆளுங்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக கேள்விகள் கேட்கலாமா என அதிர்ச்சியடைந்தது மேயர் தரப்பு.
இதுகுறித்து கட்சி மாவட்ட தலைமை கவனத்திற்கு மேயர் தரப்பு கொண்டு சென்றது. இதையடுத்து 'விவகாரமான' கேள்விகளை எழுப்ப கவுன்சிலர்களுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டு விட்டது.
இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் மண்டல, நிலைக் குழு தலைவர்கள் 7 பேரின் ராஜினாமா ஏற்கும் வகையில் இக்கூட்டத்தில் முதல் தீர்மானமாக இடம் பெற்றுள்ளது ஆளுங்கட்சி கவுன்சிலர்களையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதனால் சம்பந்தப்பட்ட 7 பேர் கூட்டத்தில் பங்கேற்பரா எனவும் கேள்வி எழுந்தள்ளது. இது கவுன்சில் கூட்டத்தில் அ.தி.மு.க., 'அரசியல்' செய்ய வாய்ப்பு ஏற்படும் என அக்கட்சியினர் புலம்புகின்றனர்.
அ.தி.மு.க., தலைமை முடிவு அதேநேரம் அ.தி.மு.க.,வும் இக் கூட்டத்தில் 'அரசியல்' செய்ய காத்திருக்கிறது. இதுகுறித்து நேற்று அமைச்சர் செல்லுார் ராஜூ தலைமையில் அக்கட்சி மாநகராட்சி கவுன்சிலர்களுடன் ஆலோசனை நடந்துள்ளது. அக்கூட்டத்தில் எவ்வகையான போராட்டம் நடத்த வேண்டும் என்பதை அ.தி.மு.க., தலைமையே முடிவு செய்ய உள்ளதாகவும், அதுகுறித்து கடைசி நேரத்தில் தான் அவர்களுக்கு தெரியப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
அதேநேரம் 15 அ.தி.மு.க., கவுன்சிலர்களில் 11 பேர் கூட்டத்தில் பேசுவதற்கான கேள்விகளை மேயர் தரப்புக்கு இம்முறை வழங்கவில்லை. இதனால் அவர்கள் வெளிநடப்பு செய்யும் முடிவில் இருக்கலாம்.
அப்போது பதவியை ராஜினாமா செய்த மண்டல, நிலைக்குழு தலைவர்களை கைது செய்ய வேண்டும். மேயர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போர்க்கொடி துாக்க வாய்ப்புள்ளது.
இதுகுறித்து அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா கூறுகையில், தற்போது எதுவும் தெரிவிக்க இயலாது. கட்சித் தலைமை முடிவுப்படி கூட்டத்தில் செயல்படுவோம். தொடர்ந்து நாங்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் நடவடிக்கை இல்லை. பதில் அளிப்பதுமில்லை. இதனால் இம்முறை கேள்விகள் அனுப்பவில்லை என் றார்.

