/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டாஸ்மாக் விற்பனைதான் தி.மு.க.,வின் சாதனை: அ.தி.மு.க., மருத்துவரணி குற்றச்சாட்டு

ADDED : டிச 01, 2025 05:44 AM

மதுரை: நாட்டில் இளைஞர்கள் சீரழிந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது; டாஸ்மாக் விற்பனை வசூல் மட்டுமே தி.மு.க., ஆட்சியின் சாதனை என அ.தி.மு.க., மருத்துவரணி இணைச் செயலாளர் சரவணன் குற்றம்சாட்டினார்.
அவர் தெரிவித்துள்ளதாவது: அ.தி.மு.க., ஆட்சி இளைஞர்கள் வளம் நிறைந்த ஆட்சியாக இருந்தது. 10 ஆண்டுகளில் 54 லட்சம் மாணவர்களுக்கு இலவச 'லேப்டாப்'கள் வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில் 'ஆல்பாஸ்' திட்டம், மருத்துவ கனவை நனவாக்கும் 7.5 சதவீதம் சிறப்பு இடஒதுக்கீடு என பல திட்டங்களை குறிப்பிடலாம்.
ஆனால் தற்போது தி.மு.க., ஆட்சியில் தலைகீழாக உள்ளது. தேர்தல் அறிக்கையில் ஐந்தரை லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்படும், ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு தனியார் வேலை வாய்ப்பு, நீட் தேர்வு ரத்து என அள்ளிவீசப்பட்ட வாக்குறுதிகள் என்னாச்சு. இங்கு 1.30 கோடி இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் 1.50 கோடி பேர் மது அருந்துகின்றனர். இதில் 50 லட்சம் பேர் இளைஞர்கள். தி.மு.க., ஆட்சியில் ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி டாஸ்மாக் விற்பனை வசூல் தான் ஒரே சாதனை. நாட்டில் சீரழிந்த இளைஞர்கள் அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என 'சர்வே' சொல்கிறது. இதற்கு தி.மு.க., என்ன பதில் சொல்லப்போகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.