/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சர்வதேச போட்டியில் மதுரை வீரர்கள் சாதனை
/
சர்வதேச போட்டியில் மதுரை வீரர்கள் சாதனை
ADDED : டிச 01, 2025 05:43 AM
மதுரை: தாய்லாந்தில் நடந்த மாற்றுத்திறனாளிக்கான சர்வதேசவிளையாட்டுப் போட்டியில் மதுரை வீரர்கள் பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளனர்.
தாய்லாந்தில் நவ.17 முதல் நவ.24 வரை நடந்த போட்டிகளில் 38 நாடுகளைச் சார்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் தமிழக மாற்றுத்திறனாளிவீரர்கள், வீராங்கனைகள் 27 பேர் பங்கேற்றனர். இதில் மதுரையைச் சேர்ந்த முனியசாமி வட்டு எறிதலில் தங்கம், ஈட்டி எறிதலில் வெள்ளி பதக்கங்களைப் பெற்றார். வீரர் சோனை ஈட்டி எறிதலில் தங்கம், வட்டு எறிதலில் வெள்ளி வென்றார். மனோஜ் ஈட்டி எறிதலில் தங்கம், குண்டு எறிதலில் வெள்ளி, வட்டு எறிதலில் வெண்கல பதக்கங்களைப் பெற்றார்.
கணேசன் 100 மீ., ஓட்டத்தில் வெள்ளி, பிரசாந்த் குண்டு, வட்டு எறிதல்களில் வெண்கல பதக்கங்களை வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கும், பயிற்சியாளர் ரஞ்சித் குமாருக்கும் மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையபொது மேலாளர் சுஜாதா பரிசு வழங்கினார்.
மண்டல முதுநிலை மேலாளர்கள் வேல்முருகன், சிவா, சென்னை மேலாளர் முருகவேந்தன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா பங்கேற்றனர்.

