/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விளாச்சேரியில் தயாராகும் கிறிஸ்துமஸ் குடில்கள்
/
விளாச்சேரியில் தயாராகும் கிறிஸ்துமஸ் குடில்கள்
ADDED : டிச 01, 2025 05:43 AM

திருநகர்: கிறிஸ்துமஸ் விழாவுக்காக மதுரை விளாச்சேரியில் குடில்கள் தயாரிக்கப்படுகிறது.
இங்கு தயாரிக்கப்படும் பொம்மைகள், குடில்கள் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் செல்கிறது.
பொம்மை தயாரிப்பாளர் ராமன் கூறியதாவது: ஐம்பதாண்டுகளாக இத்தொழில் ஈடுபட்டுள்ளேன். களிமண்ணால் 3 இஞ்ச் முதல் ஒரு அடி உயரமுள்ள குடில்கள், கிறிஸ்து பொம்மைகள், 2 அடி முதல் 6 அடி உயரம் வரை பிளாஸ்டர் ஆப் பாரிசில் அந்தோனியார், இயேசு, வேளாங்கன்னி சிலைகள் தயாரிக்கும் பணி நடக்கிறது. சமீபத்தில் மழை தொடர்ந்து பெய்ததால் பொம்மைகளை காய வைக்க முடியவில்லை.
உலர்ந்த பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டும் பணியே நடக்கிறது. இவற்றுக்கான மூலப்பொருட்களின் விலை அதிகரித்து விட்டது. அதற்கேற்ப பொம்மைகளின் விலையை உயர்த்த முடியவில்லை. வாங்க வருவோர் அந்தக்கால விலைக்கே கேட்கின்றனர். தொழிலில் போட்டியும் அதிகமாக உள்ளது. வேறு வழியின்றி குறைந்த லாபத்துக்கு விற்கிறோம் என்றார்.

