/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போலி வாக்காளர்களை காப்பாற்ற தி.மு.க., முயற்சி அ.தி.மு.க., குற்றச்சாட்டு

ADDED : நவ 17, 2025 01:59 AM
மதுரை: மதுரையில் அ.தி.மு.க., மருத்துவரணி இணை செயலாளர் சரவணன் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் நடக்கும் எஸ்.ஐ.ஆர்., பணி மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் தி.மு.க., எதிர்க்கிறது. இப்பணியில் தி.மு.க., செய்யும் குளறுபடிகளை அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். இதை மக்கள் விழிப்புணர்வுடன் கவனத்தில் கொள்ள வேண்டும்.
போலி வாக்காளர்களை காப்பாற்ற தி.மு.க., குறுக்கு வழியில் பல தந்திரங்களை கையாள்கிறது. 'நாங்கள் தான் மீண்டும் ஆட்சிக்கு வரப் போகிறோம். எங்களுக்கு சாதமாக செயல்பட வேண்டும்' என எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபட்டுள்ளோரை ஆளுங்கட்சியினர் மிரட்டுகின்றனர்.
மதுரையில் 27 லட்சத்து 40 ஆயிரத்து 631 வாக்காளர்கள் உள்ளனர். எஸ்.ஐ.ஆர். பணியில் 3,076 நிலை அலுவலர்கள், 290 மேற்பார்வையாளர்கள், அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். கட்சி சார்பில் பி.எல்.ஓ.,2 வாக உள்ள தி.மு.க., பாக முகவர்களே பல இடங்களில் விண்ணப்பங்கள் வழங்குவதாக புகார் எழுகிறது. அது, போலி வாக்காளர்களை காப்பாற்றும் முயற்சி. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.