ADDED : நவ 17, 2025 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை மகா தீப திருவிழா நவ. 25ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
டிச. 3ல் மலை மேல் உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தின் மேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
அன்று மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக ஹிந்து அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மலை உச்சியிலுள்ள தீபத்துாண், கார்த்திகை தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபம் பகுதிகளை போலீஸ் கமிஷனர் லோகநாதன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
துணைக் கமிஷனர் இனிகோ திவ்யன், உதவி கமிஷனர் சசிபிரியா, இன்ஸ்பெக்டர்கள் மதுரை வீரன், ராஜதுரை உடன் சென்றனர்.

