/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தாக்குதல் நடத்த நாங்கள்தான் கிடைத்தோமா டாக்டர்கள் கண்டனம்
/
தாக்குதல் நடத்த நாங்கள்தான் கிடைத்தோமா டாக்டர்கள் கண்டனம்
தாக்குதல் நடத்த நாங்கள்தான் கிடைத்தோமா டாக்டர்கள் கண்டனம்
தாக்குதல் நடத்த நாங்கள்தான் கிடைத்தோமா டாக்டர்கள் கண்டனம்
ADDED : மார் 26, 2025 03:48 AM
மதுரை : மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்துவோரை உடனடியாக கைது செய்ய பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பதோடு பயிற்சி டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மருத்துவ கழக(ஐ.எம்.ஏ.,) தென்மண்டல டாக்டர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன் சென்னை இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரியில் ஊழியர் ஒருவர் எம்.பி.பி.எஸ்., மாணவர் மீது தாக்குதல் நடத்தினார். நேற்று முன்தினம் (மார்ச் 24) இரவு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரியின் பெண் ஹவுஸ் சர்ஜன் மீது இருவர் தாக்குதல் நடத்தினர்.
இந்த இரு சம்பவங்களிலும் நடவடிக்கை எடுக்காமல் அரசு மெத்தனம் காட்டக்கூடாது என ஐ.எம்.ஏ., தென்மண்டல துணைத் தலைவர் டாக்டர் அழகவெங்கடேசன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
மருத்துவ மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் மருத்துவமனையின் முதுகெலும்பாக செயல்படுகின்றனர். சமீபகாலமாக டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் மீது தாக்குதல் தொடர்வது தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் உள்ள புறநகர் ஸ்டேஷன்களுக்கு கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும். மருத்துவமனையில் இருந்து பயிற்சி டாக்டர்கள் தங்கும் விடுதிக்கு செல்லும் வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் மின்விளக்குகளையும் கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்தி பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். கூடுதல் செக்யூரிட்டிகளை நியமிக்க வேண்டும்.
இதற்கான உள்கட்டமைப்பு செலவுகளை அரசு முதலீடாக கருதி உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும். வெளி நபர்களை விடுதிக்குள் அனுமதிக்கக்கூடாது.
மேலும் விடுதிக்குள் செல்வதற்கும், வெளியேறுவதற்கும் ஒரே ஒரு வழியை மட்டுமே பயன்படுத்த மருத்துவமனை நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்றார்.