தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஆவண எழுத்தர்கள் செயற்குழு கூட்டம்

ஆவண எழுத்தர்கள் செயற்குழு கூட்டம்

ஆவண எழுத்தர்கள் செயற்குழு கூட்டம்


UPDATED : அக் 03, 2026 12:00 AM

ADDED : அக் 02, 2026 06:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:00 AM ADDED : அக் 02, 2026 06:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் பத்திரம் நகல் எழுதுவோர் சங்கத்தின் மாநில செயற்குழு, நிர்வாகக்குழு கூட்டம் மற்றும் மதுரை, ராமநாதபுரம் மண்டல ஆவண எழுத்தர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது.

மாநில தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். செயலாளர் வாசுதேவன் வரவேற்றார்.

ஸ்டார் 3.0ல் ஆவண எழுத்தர் கடவு மூலம் அனைத்து ஆவணங்களும் உள்ளீடு செய்ய வழிவகை செய்வதுடன், எழுத்தரின் கையொப்பம் புகைப்படத்துடன் உறுதிபடுத்த வேண்டும். ஆவண எழுத்தர்கள் நலநிதிய பலன்களின் தொகையை உயர்த்த வேண்டும். எழுத்தர்களுக்கு நிரந்தர உரிமம் வழங்க வேண்டும். ஆவண எழுத்தர் தேர்வை உடனடியாக நடத்த வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் நன்றி கூறினார். மாநில பொதுச் செயலாளர் கண்ணன், பொருளாளர் முத்துக்குமார், துணைச் செயலாளர் கமலக்கண்ணன், முன்னாள் மாநில அமைப்புச் செயலாளர் சிதம்பரநாதன், ஆலோசகர் சுப்பிரமணியன் உட்பட மாநில மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us