தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆவணப்பட வெளியீட்டு விழா

 ஆவணப்பட வெளியீட்டு விழா

 ஆவணப்பட வெளியீட்டு விழா


ADDED : ஜூலை 10, 2026 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2026 04:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:மதுரைக் கல்லுாரியில், சுதந்திர போராட்ட தியாகியும், மதுரை மாவட்ட முன்னாள் கலெக்டருமான லட்சுமிகாந்தன் பாரதியின் 'சுவடுகளைத் தேடி' எனும் ஆவணப்பட வெளியீட்டு விழா நடந்தது.

கே.கே.வி., மீடியா வென்ச்சர்ஸ் சி.இ.ஒ., சக்திகுமார் வரவேற்றார். ஆவணப்படத்தின் லச்சினையை (சின்னம்) கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா வெளியிட்டார்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா பேசுகையில் ''இது ஒரு ஆவணப்படம் மட்டுமல்ல. மறைந்து கொண்டிருக்கும் சுதந்திர வரலாற்றை எதிர்கால தலைமுறைக்காக பாதுகாக்கும் வரலாற்று பொக்கிஷம். 101 வயதிலும் காந்திய சிந்தனைகளோடு வாழும் தியாகி லட்சுமி காந்தன் பாரதி மதுரையின் பெருமை'' என்றார்.

மதுரைக் கல்லுாரி வாரியத் தலைவர் சங்கர சீத்தாராமன், செயலாளர் நடனகோபால், கல்லுாரி முதல்வர் சேவியர், காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ், லெப்டினன்ட் கர்னல் சுந்தர், ஆவணப்பட தயாரிப்பாளர் சந்திரன் ஆகியோர் பேசினர்.

லட்சுமிகாந்தன் பாரதி ஏற்புரை வழங்கினார். ஆவணப்பட இயக்குநர் ஜான் தன்ராஜ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us