UPDATED : நவ 12, 2026 05:48 PM
ADDED : நவ 12, 2026 05:46 PM

அ நிறம் | அளவு
மதுரை: மதுரை அரசு மருத்துவமனை தீவிர விபத்து சிகிச்சை பிரிவு வளாகம் குப்பை காரிடாராக மாறி வருகிறது.
வார்டுகளில் தேங்கும் மருத்துவம் சாராத கழிவுகள் பாலித்தீன் பைகளில் சேகரிக்கப்பட்டு வளாகத்தின் பக்கவாட்டில் குவித்து வைக்கப்படுகிறது. மாநகராட்சி பணியாளர்கள் அவ்வப்போது சுத்தம் செய்கின்றனர். தற்போது ஒரு வாரத்திற்கு மேலாக குப்பை மூடைகள் காரிடாரின் நீளத்திற்கு பரவி கிடக்கிறது. பாலித்தீன் பைகளை மாடுகள் பிரித்து மேய்வதால் குப்பை முழுவதும் சிதறி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. நோயாளிகளின் சுகாதாரம் கருதி குப்பையை உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும்.
