/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நெரிசலான அரசரடி ரவுண்டானா தாமதமாவதேன்
/
நெரிசலான அரசரடி ரவுண்டானா தாமதமாவதேன்
ADDED : டிச 18, 2024 05:26 AM
மதுரை : மதுரை அரசரடியில் ரூ.5 கோடி நிதிஒதுக்கி துவக்கிய பணிகள் நீண்டநாட்களாக கிடப்பில் உள்ளது.
அழகர்கோவில் ரோட்டில் பாண்டியன் ஓட்டல் அருகிலும், தாமரைத் தொட்டி பகுதியிலும் ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத்துறையிடம் திட்டம் உள்ளது. அரசரடி சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பெரிய அளவில் ரவுண்டானா அமைக்க ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலைத் துறை ரூ.5 கோடி நிதிஒதுக்கியது. மாவட்ட வருவாய் அதிகாரிகள் இடத்தை ஆய்வு செய்து பணிகளும் துவங்கின. மின்கம்பங்களை அகற்ற நிதிஒதுக்கப்பட்டது.
இப்பகுதியில் ரவுண்டானா அமைய போதிய இடம் உள்ளது. மழைநீர் வடிய கால்வாய் உள்ளது. அருகே உள்ள மின்வாரியத்தின் ஒரு கட்டடத்தை அகற்றினால் போதும். இருப்பினும் பணிகள் நடக்காமல் இருக்க ரவுண்டானா அமையவுள்ள பகுதியில் பொதுப்பணித்துறை, ரயில்வே துறைகளின் இடம் உள்ளதே காரணம்.
நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் மோகனகாந்தி கூறுகையில், ''ரவுண்டானா அமைய உள்ள இடம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு உள்ளது. அது முடிவுக்கு வந்தால்தான் பணிகளை துவங்க முடியும்'' என்றார்.