/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காதல் வயப்பட்டு குழந்தைத் திருமணத்தில் சிக்காதீங்க: நான்கு ஆண்டுகளில் 183 வழக்குகள் பதிவு
/
காதல் வயப்பட்டு குழந்தைத் திருமணத்தில் சிக்காதீங்க: நான்கு ஆண்டுகளில் 183 வழக்குகள் பதிவு
காதல் வயப்பட்டு குழந்தைத் திருமணத்தில் சிக்காதீங்க: நான்கு ஆண்டுகளில் 183 வழக்குகள் பதிவு
காதல் வயப்பட்டு குழந்தைத் திருமணத்தில் சிக்காதீங்க: நான்கு ஆண்டுகளில் 183 வழக்குகள் பதிவு
ADDED : மார் 21, 2025 05:54 AM

மதுரை: மதுரை மாவட்டத்தில் குழந்தை திருமணம் குறித்து 4 ஆண்டுகளில் 507 தகவல்கள் சமூகநலத்துறைக்கும், போலீசாருக்கும் வரப்பெற்றதில் 183 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இந்திய சட்டப்படி 18 வயதுக்குட்பட்ட பெண்ணுக்கு நடைபெறும் திருமணம் குழந்தை திருமணம். வறுமை, கடமை போன்ற காரணங்களால், இவ்வாறு திருமணம் செய்வது குறைந்துவிட்டாலும், சில சமூகங்களில் இன்றும் மறைமுகமாக நடக்கத்தான் செய்கிறது.
இதுதவிர பள்ளியில் படிக்கும் போதே காதல் வயப்பட்டு வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ளும் மாணவியரும் உள்ளனர். சில சமயம் மருத்துவமனையில் குழந்தை பேறுக்காக அனுமதிக்கும்போதுதான் குழந்தை திருமணம் குறித்து போலீசாருக்கும், சமூகநலத்துறைக்கும் தெரிய வருகிறது. இதன்பின் கணவர் மீது 'போக்சோ' வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
குழந்தை திருமணம் குறித்து மாணவியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சைல்டு லைன் எண் 1098 மற்றும் 14417 என்ற உதவி எண் நடைமுறையில் உள்ளது. இந்த எண்களுக்கு மாணவியர் தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர்.
2020 முதல் 2024 வரை 690 புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மதுரை சமூக ஆர்வலர் மோகன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெற்ற பதில்கள் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிகபட்சமாக 2021ல் 183 தகவல்கள் வரப்பெற்றதில் 145 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
திருமணம் செய்ததாக 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்தாண்டு நவம்பர் வரை 171 தகவல் வரப்பெற்று 135 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
போலீசார் கூறுகையில், ''காதல் பிரச்னையால் 18 வயது ஆகும் முன்பே உறவினர் பையனுக்கு மகளை திருமணம் செய்து கொடுப்பது இன்றும் நடக்கிறது.
தகவல் அறிந்து செல்வதற்குள் திருமணம் நடந்துவிட்டால் அதை சட்டப்படி ரத்து செய்யும் நடவடிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறோம். பெற்றோருக்கும், சிறுமிக்கும் கவுன்சிலிங் கொடுத்து 18 வயதை கடந்த பின் திருமணம் செய்ய வழிகாட்டுகிறோம். மீறினால் 2 ஆண்டு சிறை, ரூ.ஒரு லட்சம் அபராதம் நீதிமன்றத்தால் விதிக்கப்படும்'' என்றனர்.