/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுப்பழக்கத்திற்கு அடிமையாகாதீர்கள்: டாக்டர் கிருஷ்ணசாமி அட்வைஸ்
/
மதுப்பழக்கத்திற்கு அடிமையாகாதீர்கள்: டாக்டர் கிருஷ்ணசாமி அட்வைஸ்
மதுப்பழக்கத்திற்கு அடிமையாகாதீர்கள்: டாக்டர் கிருஷ்ணசாமி அட்வைஸ்
மதுப்பழக்கத்திற்கு அடிமையாகாதீர்கள்: டாக்டர் கிருஷ்ணசாமி அட்வைஸ்
ADDED : டிச 23, 2025 07:15 AM

எழுமலை: ''இளைஞர்களே மதுப்பழக்கத்திற்கு அடிமையாகாதீர்கள்,'' என, எழுமலை அருகே ஆத்தங்கரைப்பட்டியில் புதிய தமிழகம் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அதன் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவுறுத்தினார்.
மதுரையில் 2026 ஜன., 7 ல் புதிய தமிழகம் மாநில மாநாடு நடக்கிறது. இதுதொடர்பாக நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி மேலும் பேசியதாவது: சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 45 கிராமங்களுக்கும் மேலாக தேவேந்திரகுல மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி சுவாமி கும்பிடுவது தொடர்பாக கருத்து வேறுபாடு, மோதல் எழுகிறது. இதனை சட்டரீதியாக அணுக வேண்டும். அதற்கு அரசியல் கட்சியின் ஆதரவு இருக்க வேண்டும். மற்ற கட்சியினர் மோதல்களை உருவாக்குவார்கள். புதிய தமிழகம் கட்சி மாத்திரமே தீர்வை வழங்கும்.
கிராமத்தில் இணைந்து பொது நிதியை அதிகமாக சேர்க்க வேண்டும். நிதி அதிகம் இருந்தாலே பக்கபலமாக இருக்கும். அனைவரும் ஒன்று சேர்ந்து பள்ளிக்கூடம் உருவாக்குங்கள். இளைஞர்களே மதுப்பழக்கத்திற்கு அடிமையாகாதீர்கள். இன்றும் பல கிராமங்களில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை. இவற்றிற்கெல்லாம் தீர்வு காணும் வகையில் மதுரையில் வரும் ஜன., 7ல் மாநில மாநாடு நடக்கிறது என்றார்.

