/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'ஓவரா கத்தினால்ல... தொண்டையை பிடிச்சு நெம்பிட்டேன்' மனைவிக்கு 'டார்ச்சர்' கொடுத்த போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்' தந்தையான இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் மீது வழக்கு

ADDED : ஜூலை 19, 2025 03:36 AM

மதுரை: மதுரையில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக போலீஸ்காரர் பூபாலன், அவரது தந்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை காதக்கிணற்றில் வசிப்பவர் பூபாலன் 35. இவர் மதுரை அப்பன்திருப்பதி ஸ்டேஷன் போலீஸ்காரராக உள்ளார். இவரது தந்தை செந்தில்குமார், விருதுநகர் மாவட்டம் சாத்துார் போக்குவரத்து இன்ஸ்பெக்டராக உள்ளார். பூபாலன் மனைவி தங்கப்ரியா 30. இருவருக்கும் 2017ல் திருமணம் நடந்தது. இரு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் குடும்ப பிரச்னை நீடித்து வந்த நிலையில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தன்னை துன்புறுத்துவதாக போலீசில் தங்கப்ரியா புகார் அளித்தார்.
அதில் தெரிவித்துள்ளதாவது:
திருமணத்தின்போது 60 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள், டூவீலர் சீர்வரிசையாக கொடுக்கப்பட்டன. திருமண நாளில் இருந்து வரதட்சணை குறைவாக கொடுத்து ஏமாற்றி விட்டதாக கூறி மனதளவில் துன்புறுத்தினர். எனது தம்பிக்கு சென்னையில் தந்தை ரூ.70 லட்சத்திற்கு வீடு வாங்கி கொடுத்தார். இதை சுட்டிக்காட்டி மேலும் நகை, பொருட்கள் வாங்கி வரச்சொல்லி துன்புறுத்தினர். ஜூலை 16ல் என் முகத்தில் கணவர் அடித்ததோடு, தலைமுடியை பிடித்து இழுத்து கட்டிலில் மோத செய்து கழுத்தை நெரித்து மிரட்டினார். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காயம்பட்ட தங்கப்ரியா சிகிச்சை பெற்று வருகிறார்.
பிராண்டிட்டேன்
பூபாலன் மற்றும் அவரை துாண்டியதாக தந்தை செந்தில்குமார், அம்மா விஜயா, தங்கை அனிதா ஆகியோர் மீது கொலை முயற்சி உட்பட 4 பிரிவுகளிலும், பெண் வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தின்கீழும் அப்பன்திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே பூபாலன் ஜூலை 16ல் மனைவியை தாக்கியது குறித்து தனது தங்கை அனிதாவிடம் பேசிய ஆடியோ வைரலானது. அதில், 'அவள்(தங்கப்ரியா) வாய் வீங்கி போயிருச்சு. முஞ்சியே மாறி போயிருச்சு. அந்தளவிற்கு பிராண்டிட்டேன். அவ பேசினாலே எரிச்சலா இருக்கு. அதான் வாயை மூடுடி மூடுடி என பொத்தி நகத்தை வச்சு கீறினேன்.
ஓவரா கத்தினால்ல, தொண்டையை பிடிச்சு நெம்பிட்டேன். தொண்டை வலிக்குதுனு சொல்றா. கால வச்சு 'லாக்' பண்ணதால முட்டி 'லாக்' ஆயிருச்சு. நொண்டி நொண்டிதான் நடக்குறா. உடம்பு அடிச்சு போட்ட மாதிரி இருக்கு. உடம்பை நல்ல பாம்பை சுருட்டி எடுத்து மாதிரி எடுத்துட்டேன். உதட்டுல வேற காயமா இருக்கு.....' என உரையாடல் நீள்கிறது.
பூபாலன் நேற்றுமுன்தினம் முதல் 2 நாள் விடுமுறையில் சென்ற நிலையில் நேற்று மாலை அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.