ADDED : செப் 22, 2024 03:35 AM

அலங்காநல்லுார், : அலங்காநல்லுார் அருகே 15 பி மேட்டுப்பட்டியில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் கென்னடி கண்ணன் 2ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம்நடந்தது. அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ., வெங்கடேசன் துவக்கி வைத்தனர்.
பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 13 ஜோடி பங்கேற்றதில் அவனியாபுரம் மோகன் சாமி குமார், சீவலப்பேரி சுப்பையா பாண்டி, துாத்துக்குடி வைப்பார் 18ம் படி கருப்புசாமி, கூடலுார் போதுராஜா காளைகள் முதல் 4 பரிசுகளை வென்றன. சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 39 ஜோடி மாடுகள் பங்கேற்றதால் இரு பிரிவுகளாக பந்தயம் நடந்தது.
புதுக்கோட்டை மலைச்சாமி கே.ஏ.அம்பாள், ராமநாதபுரம் ஆர்.ஜி.ஆர்., குலசாமிகள் கோவிந்த தேவர், முதல் பரிசையும், தேனி முத்தலாபுரம் ரஹீம் ராவுத்தர், துாத்துக்குடி சண்முகாபுரம் விஜயகுமார் 2ம் பரிசையும், திருநெல்வேலி வேலாங்குளம் கண்ணன், பரவை சோனைமுத்து 3ம் பரிசையும், ராமநாதபுரம் அபில்முகமது, புதுக்கோட்டை நட்சத்திர தர்ஷன் அரசங்குளம் தவசி 4ம் பரிசையும் வென்றன.
வெற்றிபெற்ற காளை உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு, கோப்பைகள் வழங்கப்பட்டன.