தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/சந்தேகமா... டாக்டரைக் கேளுங்கள்

சந்தேகமா... டாக்டரைக் கேளுங்கள்

சந்தேகமா... டாக்டரைக் கேளுங்கள்


UPDATED : அக் 17, 2026 05:50 PM

ADDED : அக் 17, 2026 05:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 05:50 PM ADDED : அக் 17, 2026 05:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிறுநீரக நோயாளிகளுக்கு ‘பன்’ என்ற பரிசோதனை எதற்காகச் செய்யப்படுகிறது.

-மாதவன், மதுரை

‘பிளட் யூரியா நைட்ரஜன்’ என்பதன் சுருக்கமே ‘பன்’ பரிசோதனை. இதில் நைட்ரஜன் என்ற கழிவுப்பொருள் உடலில் எப்படி வெளியேறுகிறது என்பதைத் தெரிந்து கொள்வதன் மூலம் சிறுநீரகத்தின் பாதிப்பை மட்டுமல்லாமல் கல்லீரல் செயல்பாட்டினையும் சேர்த்துத் தெரிந்துகொள்ளலாம். இதன் இயல்பு அளவு 10 லிருந்து 20 மி.கி./டெ.லி.வரை. இதற்கு மேல் அளவுஅதிகரித்தால், சிறுநீரகப் பிரச்னை என்றும், அளவு குறைந்தால் கல்லீரலில் பிரச்னை என்றும் பொருள். சிறுநீரகப் பிரச்னைக்காக சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு அந்த சிகிச்சை பலன் தருகிறதா என்பதையும் இதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும். சிறுநீரகப் பிரச்னைக்கு நீர் வறட்சி, இதயச் செயலிழப்பு போன்ற வேறு காரணங்கள் இருக்கக்கூடுமா என்பதையும் இது தெரிவிக்கிறது.

– டாக்டர் கு. கணேசன், பொது மருத்துவ நிபுணர், ராஜபாளையம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us