UPDATED : நவ 07, 2026 04:41 AM
ADDED : நவ 07, 2026 04:36 AM
அடிக்கடி தொண்டை வலியால் அவதிப்படுகிறேன். இதற்கு தீர்வு என்ன.
-சுகந்தி, மதுரை
காய்ச்சல் காலங்களில் தொண்டை வலி பொதுவானது என்பதால் பயப்படத் தேவையில்லை. சில சமயங்களில் இது சிறிய ஒவ்வாமை அல்லது தொற்றுகளாலும் ஏற்படலாம்.
அடிக்கடி வரும் டான்சிலிடிஸ் (பெரும்பாலும் ஸ்ட்ரெப்டோகாக்கல்) இதில் டான்சில் அகற்ற வேண்டியிருக்கலாம். பாரிங்கிடிஸ் வைரஸ் அல்லது பாக்டீரியா (அடினோவைரஸ், இன்ப்ளுயன்ஸா), ஒவ்வாமை அல்லது சைனசிடிஸினால் ஏற்படும் பிந்தைய பாதிப்பு, இரைப்பை உணவுக்குழாய் பின்னோட்ட நோய், தாடைப் பகுதியில் இருக்கும் டெம்போரோமாண்டிபுலர் ஜாய்ன்ட் வலிகள் தொண்டைக்கு பரவுவது காரணமாக இருக்கலாம்.
ஸ்வாப் பரிசோதனை, ரத்த மாதிரி, எண்டோஸ்கோபி, 24 மணி நேர பி.எச்., அல்லது கட்டிகளுக்கான இமேஜிங் மூலம் தொண்டையில் தொற்று இருப்பதை கண்டறியலாம். எனவே எச்சில் அல்லது உணவை விழுங்குவதில் சிரமம், குரலில் மாற்றம் போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்.
சைனஸ் தொந்தரவுக்கான சிகிச்சை, பங்கல் சைனஸ் சிகிச்சை, மூக்கின் வழியாக மூளையிலிருந்து வரும் நீரை அடைப்பது, மூளையில் இருக்கும் பிட்யூட்டரி கட்டி மற்றும் கண்களுக்கு அருகில் இருக்கும் கட்டிகள் போன்ற சிகிச்சைகள் மூளை ஓட்டினை திறந்து செய்யப்படுகிறது.
இதனால் சிகிச்சை பெறுபவர்கள் பல சிரமங்களுக்கு உள்ளாவர். ஆனால் மூளை ஓட்டினை திறக்காமல் மூக்கின் வழியாக எண்டோஸ்கோபிக் முறையில் அறுவை சிகிச்சை செய்யும் போது நோயாளி விரைவில் வீடு திரும்பலாம்.
– டாக்டர் பி. மீனா பிரியதர்ஷினி, காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர், மதுரை.
