தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/டாக்டரை கேளுங்கள்

டாக்டரை கேளுங்கள்

டாக்டரை கேளுங்கள்


UPDATED : நவ 07, 2026 04:41 AM

ADDED : நவ 07, 2026 04:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 04:41 AM ADDED : நவ 07, 2026 04:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பார்வை குறைபாடு காரணமாக கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துகிறேன். சில நாட்களாக லென்ஸ் பயன்படுத்தும் போது கண்கள் அசவுகரியமாக உள்ளது. எதனால் அவ்வாறு உள்ளது.

–அழகேஸ்வரி, ராமநாதபுரம்.

லென்ஸ் நீண்ட நேரம் அணிந்திருப்பது, லென்ஸ் பழையதாகியிருப்பது மற்றும் லென்ஸ் சரியாக பொருத்தாததால் கண்ணின் மேற்பரப்பில் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதில் ஏற்படும் தொற்று காரணமாக கண்களில் வலி ஏற்படும். பயன்பாட்டு காலம் முடிந்த பின் வேறு புதிய லென்ஸ் பயன்படுத்த வேண்டும்.

லென்ஸ்சை 8 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்திய பின் அதற்கான கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். கண்ணில் பொருத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். கண்களில் உறுத்தல் இருந்தால் தற்காலிகமாக லென்ஸ்க்கு பதிலாக கண்ணாடி பயன்படுத்தவும்.

–டாக்டர் எஸ்.ஆனந்தன், துணை பேராசிரியர், கண் மருத்துவப் பிரிவு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us