/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வரதட்சணை கொடுமை: பெண் தற்கொலை கணவர் வீட்டார் தலைமறைவு
/
வரதட்சணை கொடுமை: பெண் தற்கொலை கணவர் வீட்டார் தலைமறைவு
வரதட்சணை கொடுமை: பெண் தற்கொலை கணவர் வீட்டார் தலைமறைவு
வரதட்சணை கொடுமை: பெண் தற்கொலை கணவர் வீட்டார் தலைமறைவு
ADDED : செப் 02, 2025 05:48 AM

மதுரை : மதுரையில் நுாற்றுக்கணக்கான பவுனில் நகைபோட்டு திருமணம் செய்தும், வரதட்சணைக் கொடுமையால் இளம்பெண் பிரியதர்ஷினி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கணவர் வீட்டார் மீது வழக்குப்பதிந்துள்ள போலீசார் அவர்களை தேடுகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அல்லிகுண்டம் வி.பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் அக்கினி. இவரது இளையமகள் பிரியதர்ஷினியை 28, மதுரை செல்லுார் இலங்கேஸ்வரனின் மூத்த மகன் ரூபன்ராஜூக்கு நிச்சயம் செய்தனர்.
300 பவுன் நகை ''ரூபன்ராஜின் சகோதரிக்கு 300 பவுன் நகை போட்டு திருமணம் செய்ததால், பிரியதர்ஷினியையும் அதே அளவு நகையுடன் அனுப்ப வேண்டும்'' என கூறினர். ''அந்தளவு இயலாது. பாதியளவு போடுகிறோம். மற்றதை பின்னர் பேசிக்கொள்ளலாம்'' எனக்கூறி, கடந்தாண்டு செப்.5ல் திருமணத்தை நடத்தினர்.
ஒரே மாதத்தில் வரதட்சணை கேட்டு பிரியதர்ஷினியை, கணவர் வீட்டார் கொடுமைப் படுத்தினர். கணவர் ரூபன்ராஜ் கடையை அடைத்து விட்டு இரவு 11:30 மணிக்கு வீட்டுக்கு வந்தபின்பே பிரியதர்ஷினி உணவருந்த வேண்டும் என, நாத்தனார் வாசுகிதேவி, மாமியார் தனபாக்கியம், மாமனார் இலங்கேஸ்வரன் மிரட்டியுள்ளனர்.
நவ. 13ல் ரூபன்ராஜின் தங்கை சாந்தினிதேவி, சித்தப்பா ரமேஷ், அத்தை உமா மகேஸ்வரி, மாமா சிங்கத்தமிழன் ஆகியோர் பாக்கி நகையை கேட்டு பிரச்னை செய்தனர். கடந்த மார்ச் 15ல் அடித்து கொடுமைப்படுத்தியதில் காயமடைந்த பிரியதர்ஷினி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது பெற்றோர், திருமணத்தை முன்னின்று நடத்திய குப்பணம்பட்டி தேவராஜை அழைத்துப் பேசினர். ''மேலும் 50 பவுனும், ரூ.10 லட்சமும் வழங்கினால் மகளை நல்லமுறையில் வாழ வைக்கலாம்'' என அவர் தெரிவித்துள்ளார். பிரியதர்ஷினி வீட்டார் 2 மாதங்கள் அவகாசம் கேட்ட நிலையில் தொடர்ந்து துன்புறுத்தியதால் செல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரி வித்து, மகளை தங்களுடன் அழைத்துச் சென்றனர்.
தற்கொலை பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் ''நகை இன்றி சேர்ந்து வாழ முடியாது'' என கணவர் வீட்டார் கூறியதால் பிரியதர்ஷினி மனம் உடைந்தார். விரக்தியில் இருந்த அவர், ஆக.29ல் நாத்தனார் வாசுகிதேவி காலில் விழுந்தாவது வாழ்வதாக கூறி, செல்லுார் சென்றார். அன்று மதியம் 2:00 மணிக்கு ரமேஷ், பெண்வீட்டாரை தொடர்பு கொண்டு அரசு மருத்துவமனையில் பிரியதர்ஷினி கவலைக்கிடமாக உள்ளார் என அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
பதறிப்போனவர்கள் சென்று பார்த்தபோது, கையில் வெட்டுடன் பிரியதர்ஷினி சிகிச்சை பெற்றுள்ளார். 'இந்த நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது' என புலம்பியுள்ளார். ஆக.30 இரவில் அவர் இறந்தார்.
வரதட்சணை கொடுமையால் கையை அறுத்துக்கொண்டு அவர் தற்கொலை செய்துள்ளார். இதையடுத்து ரூபன்ராஜ், ரமேஷ், உமா மகேஸ்வரி, சிங்கத்தமிழன், வாசுகிதேவி, முகுந்தன், இலங்கேஸ்வரன், தனபாக்கியம், சாந்தினிதேவி, தேவராஜ் மீது போலீசார் வரதட்சணைக் கொடுமை வழக்குப் பதிந்தனர். தலைமறைவான அவர்களை தேடி வருகின்றனர்.