ADDED : செப் 02, 2025 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் தமிழ்நாடு முக்குலத்தோர் நலச்சங்கம் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பொதுக்குழு உறுப்பினர் மனோகரன் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் செந்தில்குமார், கவுரவ ஆலோசகர் கார்த்திகேயன், இணைச் செயலாளர் பாரதி, பொருளாளர் குமரேசன் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஆதி முத்துக்குமார் வரவேற்றார்.
பூலித்தேவன் உருவ படத்திற்கு மாலை அணிவித்தனர். தி.மு.க., முன்னாள் நகர செயலாளர் பிரகாஷ், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், தே.மு.தி.க., நகர செயலாளர் பாலாஜி, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் மகேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். பொதுக்குழு கோட்டூர் சாமி நன்றி கூறினார்.