/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வெளிநாட்டுக்கு சென்று ஈர்த்த முதலீட்டில் பத்து சதவீதத்தைக் கூட நிறைவேற்றவில்லை டாக்டர் சரவணன் குற்றச்சாட்டு

ADDED : டிச 08, 2025 06:11 AM
மதுரை: 'முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுக்கு சென்று ஈர்த்த முதலீடுகளில் 10 சதவீதத்தை கூட நிறைவேற்றவில்லை' என அ.தி.மு.க., மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் குற்றம்சாட்டினார்.
அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மதுரையில் முதல்வர் ஸ்டாலின், வடிகட்டிய பொய்களை கூறியுள்ளார். நான்கரை ஆண்டுகளில் ரூ.11 லட்சத்து 83 ஆயிரம் கோடி தொழில் முதலீட்டை ஈர்த்ததாகவும், 34 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கியதாகவும் கூறுகிறார்.ஆனால் மத்திய அரசு தரவுகளில் 9 சதவீதம் தான் உள்ளது.ரூ.ஒரு லட்சம் கோடிக்கு குறைவாகவே தொழில் நிறுவனங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகம், குஜராத் மாநிலங்கள் முதலீட்டை ஈர்ப்பதில் முன்னணியில் உள்ளன. தமிழகத்தில் ஒப்பந்தம் செய்த பல நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு சென்றுவிட்டன. இங்கு தொழில் தொடங்க இடையூறு, இடைத்தரகர் உள்ளதால் முதலீட்டாளர்கள் வர மறுக்கின்றனர்.தென் கொரிய நிறுவனம் காலனி உற்பத்திக்காக ரூ.1,720 கோடியை தமிழ்நாட்டில் ஒப்பந்தம் செய்து, தற்போது ஆந்திரா சென்று விட்டது.
மத்திய அரசு வெளியிட்ட தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இல்லை.தற்போது கூட மதுரையில் ரூ.36 ஆயிரம் கோடிக்கு முதலீடு ஈர்க்கப்பட்டதாக கூறுகிறார். மாவட்டம் வாரியாக தொழிற்சாலைகள் நிறுவப்பட்டது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும். இவ்வாறு கூறினார்.