/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போதைப்பொருள் கடத்துவதுதான் திராவிட மாடலா மதுரை அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் ஆவேசம்
/
போதைப்பொருள் கடத்துவதுதான் திராவிட மாடலா மதுரை அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் ஆவேசம்
போதைப்பொருள் கடத்துவதுதான் திராவிட மாடலா மதுரை அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் ஆவேசம்
போதைப்பொருள் கடத்துவதுதான் திராவிட மாடலா மதுரை அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் ஆவேசம்
ADDED : மார் 05, 2024 03:57 AM

மதுரை : ''ஏற்கனவே பூச்சி மருந்து ஊழல், 2ஜி ஊழல். தற்போது சர்வதேச நாட்டிற்கு போதை மருந்து கடத்தல். இதுதான் திராவிட மாடலா'' என போதைப் பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக தி.மு.க., அரசை கண்டித்து மதுரையில் நேற்று அ.தி.மு.க., நகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு மாவட்டங்கள் சார்பில் பெத்தானியாபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஆவேசமாக கேட்டனர்.
தொடர்ந்து போராட்டம்
கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா பேசியதாவது: டில்லியில் ரூ. 2000 கோடி அளவில் போதைப் பொருள் கடத்தலில் தி.மு.க.,வில் இருந்த ஜாபர் சாதிக் இதுவரை கைது செய்யப்படவில்லை. தவறு செய்பவர்களுக்கு தி.மு.க., அரசு பாதுகாப்பாக உள்ளது. இதுபோன்று நீடித்தால் அ.தி.மு.க., தொடர்ந்து போராட்டம் நடத்தும் என்றார்.
வாய்ப்பூட்டு சட்டம்
மேற்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் பேசியதாவது: காவிரி, கச்சத்தீவு, பாலாறு போன்ற உரிமைக்காக அ.தி.மு.க., போராடி வருகிறது. அதேபோல் தமிழகத்தில் ஒரு துளி போதை ஒழியும் வரை போராட்டம் நடத்தப்படும். தி.மு.க., தன் தோழமைக் கட்சிகளுக்கு வாய்பூட்டு சட்டம் போட்டுள்ளது. அதனால் தான் அவர்கள் போராடவில்லை.
இன்றைக்கு போதைப்பொருள் கடத்தலில் ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் சென்று கொண்டிருக்கிறது. இப்படியே நீடித்தால் தமிழகத்தின் பட்ஜெட்டை போட்டு விடலாம். நாம் கடன் வாங்க அவசியமே இருக்காது.
டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து 2.0, 3.0, 4.0 என்று சொன்னார்கள். ஆனால் இன்றைக்கு போதைப்பொருள் தடுப்பதில் ஓட்டை விழுந்து விட்டது. மத்திய அரசிடம் நிவாரண நிதியை 38 எம்.பி.,க்கள் பெற முடியவில்லை. இவர்களுக்கு ஏன் பதவி என்றார்.
நகர் செயலாளர் செல்லுார் ராஜூ பேசியதாவது: ஏற்கனவே பூச்சி மருந்து ஊழல், 2ஜி ஊழல், தற்போது சர்வதேச நாட்டிற்கு போதை மருந்து கடத்தல். இதுதான் திராவிட மாடலா. இதுதான் உலகத்துக்கு வழிகாட்டு மாடலா. ஜெயலலிதா இருக்கும்போது சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டு பிடித்து வரலாறு படைத்தார்.
இன்றைக்கு டி.ஜி.பி., யுடன் போதை பொருள் கடத்தல் மன்னன் போட்டோ எடுத்துள்ளார். இதுகுறித்து மத்திய அரசு விசாரிக்க வேண்டும். செந்தில் பாலாஜி கைதுக்கு கோவையில் தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.
போதை பொருள் கடத்தலுக்கு நடத்தவில்லை. தமிழக மக்களை ஏமாளியாக்க நினைக்கிறார்கள். மதுரையில் போதைப்பொருள் பிடிபட்டதற்கு மதுரை எம்.பி., எந்த பதிலும் சொல்லவில்லை. லோக்சபா தேர்தலில் சவுக்கடியை மக்கள் கொடுக்க வேண்டும் என்றார்.
எம்.எல்.ஏ., பெரிய புள்ளான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

